தந்தையை தொட்ட சிறுவன்…. வயலில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து தந்தை,மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் விவசாயியான செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வன விலங்குகளிடமிருந்து நெற்பயிரை பாதுகாப்பதற்காக தனது வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் செந்தில் தனது மகனான தர்மராஜனுடன் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக மின் வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி செந்தில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து விட்டார். இதனை அறியாத தர்மராஜன் தனது தந்தையை தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதனால் தர்மராஜனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை மற்றும் மகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *