மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் நிக்கோலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் உள்ளிட்ட 8 பேர் மொட்டைக்கோபுரம் கடற்கரையிலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கடற்கரையில் இருந்து 10 மைல்கள் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மாரியப்பனின் உடலை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *