இடியுடன் பெய்த கனமழை…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இடியுடன் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகரிகுப்பம் பகுதியில் பஞ்சாட்சரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பொன்வேல் என்பவரும் வசித்து வந்துள்ளார். அதன்பின் அவர்களின் பசுமாடுகள் அருகாமையில் இருக்கும் இடத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென பலத்த கனமழை பெய்ததால் பொன்வேல் மற்றும் பஞ்சாட்சரம் ஆகிய இருவரும் தங்களுடைய மாடுகளை அழைத்து வருவதற்காக சென்றுள்ளனர்.

அந்த நேரம் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *