காணாமல் மின்மோட்டார்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் இருந்த மின்மோட்டாரை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெலாகுப்பம் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தில் கோகுல் என்பவர் காவலாளியாக உள்ளார். இந்நிலையில் கோகுல் வழக்கம்போல் கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது கிணற்றில் இருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோகுல் விநாயகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விநாயகம் இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மின்மோட்டாரை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *