”கிளு கிளுப்பு காட்டி திமுக வெற்றி” அமைச்சர் விமர்சனம் …!!

மக்களுக்கு கிளுகிளுப்பு காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமசித்துள்ளார்.

ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வரை சந்தித்து வந்த அமைச்சர் வேலுமணி , ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் ,வேலூர் தேர்தலில் திமுக வெற்றி குறித்து கூறுகையில் , பணநாயகத்தை திமுக  நம்பி இருந்தது . இது ஒரு மோசமான வெற்றி என்று சொல்லலாம் , ஒரு மோசடியான வெற்றி என்று சொல்லலாம். கடந்த தேர்தலை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் 2 லட்சம், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.

Image result for minister jayakumar

அப்போது அப்பாவி மக்களுக்கு   நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு அந்த வாக்குகளை பெற்றார்கள். அதேபோன்று இந்த தேர்தலில் எடுபடவில்லை. இந்த தேர்தலில் மக்களுக்கு கிளு கிளுப்பு காட்டி ஏமாற்றும் திமுக ட்ரெண்ட் நாம் பார்க்கும்போது கண்டிப்பாக 2011 இல் திமுக தேராது என்பது நிலைதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.