“மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  கூறுகையில் , இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை தமிழகம் ஏற்கக்கூடாது  என்று தெரிவித்தார்.

இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பதிலளித்தார்.