பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்…!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசி உள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தில்லி வரும் போது தன்னை சந்திக்குமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். அதனால் அவரை இன்று நான் சந்தித்தேன். இதனையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

நீட் தேர்வுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன். மேலும் நீட் தேர்வு தொடர்பாக கேட்டபோது பிரதமர் சில விளக்கங்களை அளித்துள்ளார். மேலும்  கேலோ இந்தியா போட்டியை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதனை தொடர்ந்து தமிழகத்தில் மாவட்டம் தோறும் விளையாட்டு திடல்கள் அமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தேன் என தெரிவித்துள்ளார்.