“வெள்ளை அறிக்கையுடன் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் கொடுப்போம்”… ராஜேந்திர பாலாஜி கிண்டல்..!!

வெள்ளை அறிக்கை மட்டுமின்றி வெள்ளரிக்காய் கூட ஸ்டாலினுக்கு தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார்.

Image result for ராஜேந்திர பாலாஜி,

இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார், “வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என பதில் கூறினார். மேலும் உலக தமிழர்களின் மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க  முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Image result for ராஜேந்திர பாலாஜி ஸ்டாலின் ,

இந்நிலையில் ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  வெள்ளை அறிக்கை மட்டுமின்றி மஞ்சள், பச்சை அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட ஸ்டாலினுக்கு தருவோம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.  தொழில் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த உடனே தொழில் தொடங்க முடியாது என்றும்,  முதலீடு விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.