8 வழி சாலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு!!… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சை பேச்சு !!..

எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு  எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து  சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது  மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . எட்டுவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த அவசர நடவெடிக்கைகளுக்கு  நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு பேசினார் ,எட்டுவழி சாலை தீர்ப்பில்  உயர்நீதிமன்றம் தடை விதித்தால் தமிழக . அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்து  இருந்தார் . மேலும் சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிக அவசியமான ஒன்றாக . கருதப்படுகிறது  இதனை மையமாகக்கொண்டே முதலமைச்சர் பழனிசாமி ‘இந்த 8வழிச்சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் தவிர . மற்றபடி, இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.என்று அவர் தெரிவித்தார் .


விவசாயம் செய்வதற்கு  எத்தனையோ இடங்கள் இருக்கின்றன . அங்கெல்லாம் விவசாயம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் . விவசாயத்திற்கு பாதிப்பு  ஏற்படுத்தும் அளவிற்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.என்றும் அவர் தெரிவித்தார் .

மேலும் விவசாயிகளுக்கு விளைநிலநம்களுக்கு ஏற்றார் போல்  அரசால் தகுந்த இழப்பீடும் வழங்கப்படுகிறது எனவே இந்த வழக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி யாருக்கும் பாதிப்பு ஏற்படாதா வண்ணம் முதலாவரும் துணை முதவற்றும் முடிவு எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்