”அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு” வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து அத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருவதாகவும் , யோகா உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்வுகள் சர்வதேச அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே முக்கியமாக பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்த ஜெய்சங்கர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானுடன்  நட்புறவு வைப்பது கடினம் என்றும் தெரிவித்தார்.