”உள்ளாட்சி தேர்தல் அட்டவணை கொடுத்தாச்சு” அமைச்சர் உறுதி ….!!

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்ற கேள்வியும் எழுந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை பணிகள் நடைபெற்றதால் தேர்தல் கால தாமதம்

ஏற்பட்டதாகவும் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதால் தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறுகையில் , உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை உச்சநீதிமன்ற தமிழக தேர்தல் ஆணையம் தந்துவிட்டது என்று தெரிவித்தார்.