மினி லாரி – மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் மோட்டார் சைக்கிளில் புது கேசாவரம் செக்போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தமிழரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழரசன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் தமிழரசனை உடனடியாக மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் தமிழரசன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தக்கோலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வழக்கு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *