மீண்டும் சூட்டிங்கில் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை சமந்தா…. படக்குழுவினர் வெளியிட்ட தகவல்….!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உள்ள சமந்தாவுக்கு சமீபத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது, மயோசிடிஸ் எனும் தசையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்நோய் குணமாக சிறிது காலம் ஆகும் எனவும் சமந்தா தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் சமந்தா விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்தினர். இதற்கிடையில் வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா எனும் வெப் தொடரில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன் படப்பிடிப்பை சமந்தா சிகிச்சையில் இருந்ததால் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது சிட்டாடல் இந்தியா வெப் தொடர் படப்பிடிப்பில் சமந்தா கலந்துகொண்டு நடித்து வருகிறார். இவ்வாறு படப்பிடிப்பில் சமந்தா இணைந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

Leave a Reply