மீண்டும் ரூ.1000 வரப்போகுதா?…. இணையத்தில் தீயாய் பரவும் புது தகவல்…..!!!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கரன்சி நோட்டுகள் குறித்து பல்வேறு வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகிறது. அதன்படி தற்போது பழைய 1000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய செய்திகள் வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ​​ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் வாயிலாக அரசாங்கம் நாட்டில் கருப்பு பணத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

கருப்பு பணத்தை சந்தையிலிருந்து அகற்ற அத்தகைய நோட்டுகளை செல்லாது என அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. எனினும் இப்போது அரசு மீண்டும் 1000 ரூபாய் நோட்டை வெளியிடப்போகிறது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. எனினும் அது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.