மரம் ஏற முயற்சி செய்த தொழிலாளி…. மின் வேலியில் சிக்கி பரிதாபம்…. ஈரோட்டில் சோகம்….!!

தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கடத்தூர் செட்டிபாளையம் பகுதியில் துரையன் என்பவர் வசித்து வந்தார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் துரையன் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு மரத்தில் துரையன் ஏறுவதற்கு முயற்சி செய்தார்.

அப்போது தோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த மின் வேலியில் துரையன் சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் துரையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் மின்வேலி அமைத்த மனோகரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *