மின் சிக்கன வார விழா…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்….!!

கோட்ட அலுவலகம் முன்பாக மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்வாரியத்துறை சார்பாக மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர்கள் சிவப்பிரியா, ஜெயபாரதி மற்றும் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இவ்விழாவில் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகளை தேவையில்லாத நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்து மின்சாரத்தை சேமிக்கலாம்.

பின்னர் ஏ.சி-யை தேவையான நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவதால் மின்சாரத்தை சேமிக்கலாம். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். மேலும் கோட்டத்துக்கு உட்பட்ட சோளிங்கர் உள்பட 5 ஊர்களில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *