“லட்ச ரூபாயில் ஆயா” மகனுக்காக செலவு செய்வேன்…. இந்தி நடிகை கரீனா கபூர் ஓபன் டாக் …!!

தன்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகையாக நடித்து வருபவர் கரீனா கபூர். இவர் “ரேபியகீ” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது அறிந்ததே .பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டு இந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்தார். இவர்  கடந்த 2012_ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை தொடங்கினார் . இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது . மேலும் கரீனா கபூர் குழந்தை பிறந்த பின்பும் திரைத்துறையில் தொடர்ந்து  நடித்து வருகிறார்.

Image result for இந்தி நடிகை கரீனா கபூர்

தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வரும் கரீனா கபூர் தந்து குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுத்து ஒரு ஆயாவை வேலைக்கு வைத்துள்ளார். இது சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தது . இது குறித்து சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அவர் , “என்னுடைய  மகனை பார்த்துக்கொள்ள நான் ஆயா வேலைக்கு வைத்திருப்பதை  பலரும் விமர்ச்சனம் செய்கிறார்கள்” என்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் , அதற்கு விலை மதிப்பே இல்லை என்று தெரிவித்தார்.