பால் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் தனியார் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் விலை உயர்த்தி உள்ளனர். அதன்படி கொள்முதல் விலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும், விற்பனை விலை லிட்டருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்திற்கு பால் வரத்து குறையும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தில் ஒரு லிட்டர் பால் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலை உயர்வால் கடைகளில் டீ, காபி விலை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தமிழக அரசு பால் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும் .