போதை வாலிபரின் அட்டூழியம்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மது போதையில் பால் வியாபாரியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள இடையர்தவணை கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது நான்கு சக்கர வாகனத்தில் பால் ஏற்றிக்கொண்டு சுரண்டை நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது கார்த்திக் என்ற வாலிபர் மதுபோதையில் கண்ணனை அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் கார்த்திக் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *