நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால்  குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடக்கூடிய பருத்தி சாகுபாட்டில்  ஈடுபட்டனர் .ஆனால் எலிகளால் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அனைத்தும் நாசமாகி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நெல் சாகுபடியை அடுத்து பயிரிடப்படும் பருத்தி  விவசாயிகளுக்கு நடத்தை ஏற்படுத்தியுள்ளதால்  அரசின் உரிய இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இதனால்  அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.