எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றிய இபிஎஸ்…. டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திருவாரூரில் டி.டி.வி தினகரன் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி பொதுக் குழுவில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறி இருக்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி, எம்ஜிஆர் காலத்திலுள்ள விதிதான் அது.

அண்ணாவின் மறைவுக்கு பின் தி.மு.க ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். எனினும் கருணாநிதி இரண்டாயிரத்துக்கும் அதிகமான  பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார். அதன்பின் எம்ஜிஆர் தனக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் துரோகத்திற்கு எதிராக அண்ணா திமுகவை ஆரம்பித்தார்.

எந்தவொரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவை கொண்டு நீக்கக்கூடாது என்பதற்காக தான் குறிப்பாக பொதுச் செயலாளர் பதவியை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அந்த விதியை கொண்டு வந்தார். ஆனால் இபிஎஸ் எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை எல்லாம் மாற்றி பொதுத்செயலாளர் தேர்தலில் போட்டியிட 20 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை என கூறியுள்ளார்.