நாளைக்குள் 100 அடியை எட்டுகிறதா மேட்டூர் அணை..?

கொட்டும் கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து நாளைக்குள் 100 அடியை எட்டி விடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருகின்றது. இதோடு சேர்த்து தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு பகுதியிலும் மழை கொட்டித்து தீர்த்து வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றனது.

Image result for மேட்டூர் அணை

கொட்டி வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து – 1.65 லட்சம் கன அடியாக உள்ளது. அதே போல அணையின் நீர் இருப்பு – 44.61 டிஎம்சி_யும் ,  நீர் திறப்பு – 1000 கன அடி (வினாடிக்கு) _ஆகவும் உள்ளது. நாளைக்கும் மேட்டூர் அணை  100 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.