நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறக்க இருக்கின்றார்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறக்கும் தண்ணீர் வந்து முழுமையாக கடைமடை மாவட்டமான திருவாரூர் , நாகப்பட்டினம் வரை வந்து சேருமா என்ற பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பிரதான கால்வாய்கள் இருக்கிறது. இதிலிருந்து 685 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய கிளை வாய்க்கால்கள் இருக்கின்றது.
ஒவ்வொரு கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்று ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் குடிமராத்து பணிகளுக்கு மட்டும் 16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முழுமையாக கால்வாய்களை தூர்வார வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் திறந்து விடும் தண்ணீர் கடைமடை வரை செல்லுமா என்ற கேள்வி வேதனையை ஏற்படுத்துகின்றது.