”90 அடியை தொட்டது மேட்டூர் அணை நீர் மட்டம்” நாளை நீர் திறப்பு …!!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை தொட்டுள்ளது.

கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன  அடியாக உயர்ந்துள்ளது.

நீர் மட்டம் காலை 67 அடியாக இருந்து படிப்படியாக உயர்ந்து 85 அடியாக அதிகரித்து  தற்போது 90 அடியை எட்டியுள்ளது.அணையின் நீர் மட்டம் நாளை காலை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இருக்கின்றது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.