“நெருங்கும் சட்டமன்ற தேர்தல்” மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலில்  டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Related image

டெல்லி சட்ட மன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் டெல்லி அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் வாக்களர்களை கவரும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

Image result for இலவச பயணம்

அதன் ஒரு பகுதியாக யூனியன் பிரதேசமான டெல்லியில், மெட்ரோ ரயில் மற்றும் டெல்லி மாநகர பேருந்துகளில் இனி கட்டணம் செலுத்தாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம்  என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான வருவாய் இழப்பு மாற்று செலவினங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்ளனர். இது தவிர ஆம் ஆத்மி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *