“ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை” வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

நாளை அல்லது நாளை மறுநாள்  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image result for பருவமழை

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்ட தகவலில் , பருவமழை ஜூன் 12 ஆம் தேதியே துவங்கும் என்று தெரிவித்திருந்தது. கரையை கடந்த வாயு புயல் ஈரப்பதத்தை இழுத்துச் சென்றுவிட்டதால் பருவமழை  தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய வானிலை ஆய்வு மையம் , பருவமழை தாமதத்தால் தெலுங்கானாவில் கடுமையான வெப்பம் நிலவுகிறது என்றும் , நேற்று பெரும்பாலான இடங்களில் 37 டிகிரி முதல் 42 டிகிரி வரை வெப்பம் நிலவியது என்று தெரிவித்துள்ளது.