மெட்டா நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யாமல் 1.50 ரூபாய் சம்பளம் வாங்கிய பெண் ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது. மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் டிக் டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில் வேலைகள் எதுவும் செய்யாமல் ஓராண்டிற்கு 1.5 கோடி ரூபாய் என்ற அளவில் தனக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் மெட்டா பணி நீக்கம் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் மற்றொரு பக்கம் இவ்வாறு செய்துள்ளதாக வெளியான தகவல் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.