வியாபாரி உயிரிழப்பு… முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்… டிடிவி தினகரன் கருத்து…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன் சேலத்தில் காவல்துறையினரின் தாக்குதலால் விவசாயி முருகேசன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருகின்றது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இதுபோன்ற வன்முறைகளை கையாளுவதை முழுவதும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.