இந்தியாவில் களமிறங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் … அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின்  புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெர்மன் நாட்டு  நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின்  புதிய ஜி 350டி எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய ரக்கட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அந்நிறுவனத்தின் ஜி கிளாஸ் பிரிவில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடலில் ஏ.எம்.ஜி. ஜி 63 விற்பனை செய்யப்படுகிறது.

Image result for ஜி 350டி எஸ்.யு.வி.

இந்நிலையில் புதிய ஜி 350டி எஸ்.யு.வி. அறிமுகமானதும் வாடிக்கையாளர்களுக்கு சற்றே விலை குறைந்த மற்றும் அதிக சக்திவாய்ந்த ஏ.எம்.ஜி. ஜி 63 என இரண்டு மாடல்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350டி எஸ்.யு.வி. மாடலின் உள்புறம் ஏ.எம்.ஜி. ஜி 63 மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டேஷ்போர்டில் வைடுஸ்கிரீன் காக்பிட் மற்றும் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

இதில் சென்டர் கன்சோலில் டச் பேட் இருப்பதால் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மிக எளிமையாக இயக்க முடியும். மேலும், ஸ்டீரிங் வீல் மவுன்ட்டெட் கண்ட்ரோல் மற்றும் லெதர் இருக்கைகள் , பிரீமியம் இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜி 350டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன், 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன்  மற்றும் இதன்  என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் , 4-வீல் டிரைவ் டிரான்ஸ்ஃபெர் வசதி கொண்டுள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *