எல்லாருக்கும் தொந்தரவு கொடுக்குறாங்க… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… மருத்துவமனையில் அனுமதித்த அதிகாரிகள்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிகாரிகள் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை மெயின் ரோடு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த மனநல காப்பக நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு சென்று அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் அருகிலுள்ள திருச்சி ஆத்துமா மனநல மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு 10 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு சாந்திவனம் மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும், குணமடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அந்த காப்பகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *