மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது…!!

ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். .

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள  கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட  இவர்  வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணின் கதறலை கேட்டு அவரது மாமா விரைந்து அந்த பெண்ணை  மீட்டு அப்பகுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இதையடுத்து புகாரின் பெயரில் ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இரு குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர் .இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் கர்ப்பமானதாக இருந்ததாகவும் பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குற்றவாளிகளை விசாரித்த போலீசார்  ஏற்கனவே அவ்விருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்துக்கு வந்த்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், குற்றவாளிக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறத்தது .இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.