IND VS SA 2-வது டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய புஜாரா, ரஹானே ….! இந்தியா 202 ரன்னில் ஆல் அவுட் ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது .

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட்கோலி தொடரில் இருந்து விலகியுள்ளார்.இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டுள்ளார் .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மயங்க் அகர்வால் 26 ரன்னில் வெளியேற அடுத்து வந்த புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20,  பண்ட் 17ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதில் அதிகபடச்சமாக கே.எல் ராகுல் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு களமிறங்கிய  அஸ்வின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்ததாக களமிறங்கிய முகமது ஷமி 9, பும்ரா 14, சிராஜ் 1 ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதேபோல் ராபாடா, ஒலிவியர் தலா  3 விக்கெட் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *