“பெண்களாக மாறிய ஆண்கள்” காமெடி தர்பாராக மாறிய பிக்பாஸ் வீடு..!!

தொடர்ந்து சண்டை சச்சரவு என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு இன்று கலகலவென சிரித்த வண்ணம் இருந்தது.

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக  அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் 12 ஆம் நாளான இன்று அவ்வை ஷண்முகி என்ற டாஸ்க்கை  செய்ய வேண்டுமென பிக்பாஸ் கூறினார். இந்த டாஸ்கின் படி வீட்டில் உள்ள ஆண் ஹவுஸ் மேட்கள்  அவ்வீட்டில் உள்ள பெண்கள் போல் வேடமணிந்து கடந்த வாரம் முழுவதும் நடந்த சம்பவங்களை காமெடியாக நடித்துக் காட்ட வேண்டும். அதன்படி, அனைத்து ஆண்களும் பிக் பாஸ் வீட்டில் ஒரு பெண் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதற்கான பயிற்சிகளை  மேற்கொண்டனர். உதாரணமாக சாண்டி மீரா கதாபாத்திரத்திலும், தர்ஷன் வனிதா கதாபாத்திரத்திலும் நடித்தனர். கடந்த வாரம் முழுவதும் சண்டை சச்சரவு என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு இன்று கலகலவென சிரித்த வண்ணம் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *