“அம்மாவின் நினைவாக பரிசுப்பெட்டி சின்னம்” TTV தினகரன் பேட்டி…!!

அம்மாவின் நினைவாக பரிசுபெட்டி சின்னத்தை தேர்வு செய்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக  SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்தத நிலையில் அமமுக பரிசுபெட்டகம் வழங்கப்பட்டது.

பரிசுப்பெட்டி சின்னம் க்கான பட முடிவு

இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் TTV.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்துள்ளது . 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பியது.தாய் சேய் நல பெட்டகம் நினைவாக இந்த சின்னத்தை தேர்வு செய்தோம். சோதனை என்ற பெயரில் இரவு 1 மணிக்கு என்னுடைய அரசியல் சோதனை நடத்தி கீழ்த்தனமாக அரசு நடந்து கொண்டுள்ளது.