மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது..!!

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியைப்பெற கர்நாடகம் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். இதற்கு தமிழக அரசின் எதிர் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும் இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடுமையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எந்த வகையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக மத்தியிலும் கர்நாடகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுவதை சுட்டிக்காட்டிய துரைமுருகன் இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தின் நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார். எனவே மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்து பேசி, தமிழக குழுவும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *