17_ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!

வருகின்ற 17_ஆம் தேதி அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்  நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கின்றது . இதற்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்ற அனைத்து வேலைகளையும் திமுக அதிமுக முடித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியும் , அதிமுக தலைமையில் கூட்டணியில் அதிமுக 20 தொகுதியும் ,  பாமகவுக்கு 7 தொகுதிகள்  , பாஜகவுக்கு 5 தொகுதிகள் , தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ,  என் ஆர் காங்கிரஸ் புதுச்சேரி_யும் , புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதியும் ,  புதிய தமிழகம் கட்சிக்கு  தென்காசி தொகுதியும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது .

Image result for ops eps

அதிமுக கூட்டணியில் ஏறக்குறைய கூட்டணி குறித்த அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 17_ஆம் தேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அன்றைய தினமே அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகின்றது . மேலும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்த தேர்தல் பணிகள் இதில் விவாதிகபடலாம்.