மீண்டும் ‘மாரி’ பட இயக்குனருடன் இணைகிறாரா தனுஷ்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் தனுஷ் ‘மாரி’ பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ,கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தனுஷ் தி கிரே மேன், செல்வராகவனின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

The Director Of Dhanush's 'Maari 2' Just Dropped A Major Hint About 'Maari  3'

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘மாரி’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து வெளியான ‘மாரி 2’ எதிர்பார்த்த அளவு வரவேற்பை  பெறவில்லை என்றாலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் . விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *