தொடரும் ஏவுகணை சோதனை…. கடும் கண்டனம் தெரிவித்த மூன்று நாடுகள்…. பதற்றத்தில் கிழக்குக் கடற்பகுதி….!!!!

தென் கொரிய ராணுவமும் அமெரிக்கா ராணுவமும் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த போர் பயிற்சியானது கடந்த 13ஆம் தேதி தொடங்கி வரும் 23ஆம் தேதி வரை நடக்கின்றது. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 14ஆம் தேதி குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்துள்ளது. இதனை அடுத்து ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே கடந்த 16ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த உச்சி மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சுனான் பகுதியிலிருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியில் செலுத்தி சோதனை செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு கடல் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.