மீன ராசிக்கு… “தெய்வ அனுகூலம் நிறைந்த நாள்”… மதிப்பு, மரியாதை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள்  ராசிக்கு சந்திர பகவான் 6-ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் இன்று தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாகஇருக்கும். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். இன்று பயணத்தின் போது கொண்டு செல்லும் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

இன்று தைரியத்தோடு புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான முன்னேற்றங்கள் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மீதான மதிப்பும் மற்றும் மரியாதையும் கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் இருக்காது .வியாபாரம் சுமாராக தான் இருக்கும்.

இன்று முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *