கொரோனாவுக்கு மருந்து ? அமெரிக்கா கண்டுபிடிப்பு – டிரம்ப் அறிவிப்பு …..!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார்.

சீனா தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000த்தை அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது.

பொருளாதார வல்லமை கொண்ட அமெரிக்காவையும் தும்சம் செய்துள்ள கொரோனா அங்கு 3,536 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணத்திலும் பரவிய இந்த வைரஸ் வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் , அதை மனிதர்களுக்கு பரிசோதித்து பார்த்ததாகவும் அதிபர் டிரம்ப் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதோடு கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் ரூபாய் (1000 டாலர்கள்) அளவிற்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும்,  கொரோனவை கட்டுப்படுத்த 50 பில்லியன் அமெரிக்கா டாலர் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட போவதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அதில் , கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளோம். அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள தகவலை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். உலகமே உற்று  நோக்கி காத்துக் கொண்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தாகத்தான் இருக்கும் என்று பலரையும் எண்ணுகின்றார்கள். எப்படியோ அதிபர் டிரம்ப் வெளியிட இருக்கும் அந்த முக்கிய அறிவிப்பு கொரோனா தடுப்பு மருந்தாக இருந்தால் உலகமே அமெரிக்காவுக்கு சல்யூட் அடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.