மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள ‘தாபா’ ஒன்றில் மருத்துவ மாணவர்கள் 2 பேர் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அந்த தேர்வை செல்போனில் இருந்து பார்த்து எழுதுகின்றனர். இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துவிட்டு, அவர்களிடம் பேச தொடங்கினார். அவர்களை கேள்வி கேட்ட போதும் மாணவர்கள் சிறிதும் அச்சமின்றி பார்த்து எழுதிக் கொண்டு அவருக்கு பதில் அளிக்கின்றனர்.

இந்த சம்பவம் ஒரு தாபாவின் முன் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகத்தில் வருகிறது. இதற்கு மெடிசன் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாவட்ட மாணவர் செவிலியர் சங்க தலைவரான குபேந்திரன் சிங் குர்ஜார் இந்த குற்றத்தை கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மோகன் யாதவிடம் அவர் மனு அளிக்க திட்டமிட்டுள்ளார்.