மருத்துவ கலந்தாய்வு : ”பங்கேற்ற 126 வெளிமாநிலத்தவர்” மதுரை கிளை நோட்டீஸ்…!!

தமிழக  மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவருக்கும் , 15 சதவீத இடங்கள் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 126 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே இந்த மருத்துவ கலந்தாய்வை  ரத்து செய்து , புதிய கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் உரிய விளக்கம் அளித்த நிலையில்  கலந்தாய்வில் கலந்துகொண்ட வெளிமாநிலத்தவர்களாக சொல்லப்படும் 126 பேர் ஏதன் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களின் இருப்பிடச் சான்று குறித்தும் முழு விவரங்கள் சமர்ப்பிக்க கோரி 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பி வலக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.