“மே -25 சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினம் “

காணாமல் போன குழந்தைகளை  நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினம் சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

உலகின் பல பகுதிகளிலும் வழி தெரியாமலும் நினைவிழந்தும் இன்றும் பல குழந்தைகள் பல்வேறு இடங்களில்  தொலைந்துபோவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .தொலைந்து போன குழந்தைகளின் நிகழ்கால நிலை  அறியாத குழந்தைகளின்  பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,

பிறந்த தினத்தை அறியாமல் இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் காணாமல் போனதை நினைவு படுத்தும் வகையில் இன்று ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது .ஆகையால் மே மாதம் 25ஆம் தேதி உலக அளவில் தொலைந்து போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது