வரலாற்றில் இன்று மே 15..!!

இன்றைய தினம் : 2019 மே 15

கிரிகோரியன் ஆண்டு : 135_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 136_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 230 நாட்கள் உள்ளன

 

இன்றைய தின நிகழ்வுகள் :

கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.

221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.

392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார்.

908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான்.

1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில்விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார்.

1618 – யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.

1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1730 – ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார்.

1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.

1792 – பிரான்சு சார்தீனிய இராச்சியத்துடன் போரை ஆரம்பித்தது.

1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.

1800 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

1811 – பரகுவை எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1848 – 1848 புரட்சிகள்: போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.

1849 – இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.

1850 – கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1851 – நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

1891 – திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.

1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.

1904 – உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசியாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.

1911 – மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.

1919 – துருக்கியின் இசுமீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.

1928 – வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1932 – இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.

1934 – கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.

1935 – மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.

1940 – மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.

1941 – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.

1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்னாடு) கலைத்தார்.

1948 – பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.

1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.

1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.

1958 – சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.

1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.

1972 – 1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இயுக்யூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.

1974 – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.

1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.

1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக்கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில்வெளியேற்ற ஆரம்பித்தது.

1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.

2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.

2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.

2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின சிறப்பு பிறப்புகள் :

1803 – ஆர்தர் காட்டன், பிரித்தானியப் படைத்தளபதி, பொறியியலாளர் (இ. 1899)

1817 – தேபேந்திரநாத் தாகூர், இந்திய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1905)

1845 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (இ. 1916)

1857 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1911)

1859 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1906)

1907 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராளி (இ. 1931)

1908 – சு. ம. மாணிக்கராஜா, இலங்கை அரசியல்வாதி

1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர்

1913 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய வானியலாளர் (இ. 1987)

1915 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2009)

1922 – டி. கே. ராமமூர்த்தி, தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 2013)

1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)

1937 – மாடிலின் ஆல்பிரைட், செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர்

1951 – பிராங்க் வில்செக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி

1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை

1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர்

1987 – ஆண்டி முர்ரே, இசுக்கொட்டிய டென்னிசு வீரர்

 

இன்றைய தின இறப்புகள் :

884 – முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)

1886 – எமிலி டிக்கின்சன், அமெரிக்கக் கவிஞர் (பி. 1830)

1984 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1898)

1989 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞர் (பி. 1904)

2010 – பைரோன் சிங் செகாவத், இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் (பி. 1923)

2010 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (பி. 1925)

இன்றைய தின சிறப்பு நாட்கள் :

விடுதலை நாள் (பரகுவை, எசுப்பானியாவிடம் இருந்து 1811)

ஆசிரியர் நாள் (கொலம்பியா, மெக்சிக்கோ, தென் கொரியா)

அன்னையர் நாள் (பரகுவை)

குடியரசு நாள் (லிதுவேனியா)

பன்னாட்டுக் குடும்ப நாள்

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *