வரலாற்றில் இன்று மே 04….!!

இன்றைய தினம் : 2019 மே 04

கிரிகோரியன் ஆண்டு : 124_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 125_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 241 நாட்கள் உள்ளன .

 

இன்றைய தின நிகழ்வுகள் 

1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார்.

1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார்.

1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது.

1799 – நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம்பிரித்தானியரின் கீழ் வந்தது.

1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா வீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான்.

1814 – எசுப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது.1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா, மிசிசிப்பி, மற்றும் கிழக்கு லூசியானாவில் கூட்டமைப்புப் படைகள் சரணடைந்தன.

1886 – ஹேமார்க்கெட் படுகொலை: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.

1904 – பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

1912 – ரோட்சு என்ற கிரேக்கத்த் தீவை இத்தாலி கைப்பற்றியது.

1919 – மே நான்கு இயக்கம்: சீனாவின் பிராந்தியங்கள் சப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில்தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.

1926 – ஐக்கிய இராச்சியத்தில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.

1930 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் முதல் நாள் கைப்பற்றிய துளகி தீவு மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு செருமனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.

1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால்கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

1949 – இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.

1953 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக புலிட்சர் பரிசு பெற்றார்.

1959 – முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

1970 – வியட்நாம் போர்: அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் கெண்ட் அரசுப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.

1978 – தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படைகள் தெற்கு அங்கோலாவில் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி 600 பேரைக் கொன்றனர்.

1979 – மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.

1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் செஃபீல்டு போர்க்கப்பல் அர்கெந்தீனா ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1990 – லாத்வியா சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.

1994 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக்கரை, மற்றும் எரிக்கோவில் பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.

2002 – நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் உயிரிழந்தனர்.

2014 – நைரோபியில் பேருந்துகளில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள் 

1649 – சத்திரசால், இந்திய ஆட்சியாளர் (இ. 1731)

1767 – தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)

1777 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857)

1825 – தாமசு என்றி அக்சுலி, ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1895)

1909 – ஆ. மு. சரிபுத்தீன், இலங்கைத் தமிழறிஞர், புலவர் (இ. 2000)

1922 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2015)

1928 – ஓசுனி முபாரக், எகிப்தின் 4வது அரசுத்தலைவர்

1929 – திக்கிரி அபேயசிங்க, இலங்கை சிங்கள வரலாற்றாளர் (இ. 1985)

1929 – ஆட்ரி ஹெப்பர்ன், பிரித்தானிய நடிகை (இ. 1993)

1940 – ராபின் குக், அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்

1942 – சாம் பிட்ரோடா, இந்திய தொழில் முனைவாளர், கண்டுபிடிப்பாளர்

1945 – என். ராம், இந்திய இதழியலாளர்

1958 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர் (இ. 1990)

1965 – சம்பிக்க ரணவக்க, இலங்கை அரசியல்வாதி

1981 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி (இ. 1970)

1983 – திரிசா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள் 

1799 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (பி. 1750)

1879 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)

1912 – நெட்டி இசுட்டீவன்சு, அமெரிக்க மரபணுவியலாளர் (பி. 1861)

1949 – எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்கத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1925)

1972 – காயிதே மில்லத், தமிழக முசுலிம் அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1896)

1980 – சோசப்பு பிரோசு டிட்டோ, யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1892)

1997 – டபிள்யூ. தகநாயக்க, இலங்கையின் 5வது பிரதமர் (பி. 1902)

2011 – கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (பி. 1933)

2017 – சற்சொரூபவதி நாதன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1937)

இன்றைய தின சிறப்பு நாள் 

பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்

இறந்தவர்கள் நினைவு நாள் (நெதர்லாந்து)