1 1/2 லட்சம் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மதுபான விற்பனையாளர்களிடம் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ‌செல்ல இருந்த நிலையில் வாகனத்தில் வயர் அறுந்து கிடந்ததால் பிரசன்னா கையில் வைத்திருந்த பணப்பையை இரு சக்கர வாகனத்தின் மீது வைத்து விட்டு அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தின் மீது இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசன்னா திருடன் என கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்ட அருகிலிருந்தவர்கள் வருவதற்குள் 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *