இனி கணக்குல புகுந்து விளையாடலாம்….. கூகுளின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

கணிதப் பாடத்தில் சிரமங்களை சந்திப்பவர்களுக்காக கூகுள் நிறுவனம் அசத்தலான வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பள்ளி, கல்லூரி என எந்த கல்வி வளாகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோருக்கு கணிதப் பாடங்கள் என்பது சிரமமான மற்றும்  கசப்பான ஒன்றாக இருக்கும். இதனை மாற்றும் வகையிலும், 

மாணவர்களே தானாக கணிதம் பயிலும் வகையிலும் கூகுள் லென்ஸ் செயலியில் புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் கடினமான கணக்குகள், சமன்பாடுகளை ஸ்கேன் செய்து, ஒரே ஒரு புகைப்படம் எடுத்தால் போதும், அதனை தீர்க்க கூடிய எளிதான வழிகளை கூகுள் லென்ஸ் நமக்கு வழங்கி விடும். இந்த அரிய கண்டுபிடிப்பு பெரும்பான்மையான உலக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *