டிஏ நிலுவைத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். இது தவிர்த்து பழைய ஊதிய திட்டத்தில் உள்ள வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய ஓய்வூதிய முறையிலும் உருவாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதன் வாயிலாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். அகவிலைப்படி இப்போது 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இது 38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஊழியர்கள் 3 மாத டிஏ நிலுவைத்தொகையை ஒன்றாகப் பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அப்படி நடந்தால் ஊழியர்களின் கணக்கில் மிகப் பெரிய தொகை ஒன்றாக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.