மொட்டை மாடி தடுப்புச் சுவரிலிருந்து கீழே விழுந்த சமையல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டரான தன்ராஜ் வேலூர் கே.கே நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மதுபோதையில் ஹோட்டல் மொட்டைமாடி தடுப்பு சுவரின் மீது அமர்ந்து இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கே.கே நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.