“நண்பருடன் உற்சாக குளியல்” சமையல்காரருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கால்வாயில் மூழ்கி சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பகுதியில் சித்திரை பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் சமையல் காரரான இவருக்கு இசக்கி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இருவரும் குளிப்பதற்காக கால்வாயில் இறங்கியுள்ளனர். அப்போது கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது. இதனால் சித்திரை பாண்டி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இசக்கி மற்றும் சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் கால்வாயில் இறங்கி சித்திரைப் பாண்டியை தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடர்ந்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கப்பதிவு செய்த ஆராய்மொழி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *